News April 14, 2025

அரசு ஐ.டி.ஐ.,தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம், கோரிமேடு அரசு ஐடிஐ வளாகத்தில் நாளை 15-ம் தேதி நடக்கிறது. அனைத்து தொழிற்பிரிவுகளிலும் ஐடிஐ, என்சிவிடி, எஸ்சிவிடி, மற்றும் சிஇ சான்றிதழ் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

Similar News

News April 16, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

“விலை ஆதரவு திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெறலாம்.விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம்” என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது

image

ஓமலூர் தேக்கம்பட்டியைச் சேர்ந்த தாண்டவன் (49) என்பவருக்கும், அவரது உறவினர் சரவணன் (44) என்பவருக்கும் இடையே கடந்த 13ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் குடிபோதையில் இருந்த சரவணன், தாண்டவனை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த தாண்டவன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்கு பதிந்து நேற்று சரவணனை கைது செய்தனர்.

News April 15, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்15 ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

error: Content is protected !!