News March 21, 2025

அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான நிலை அலுவலர்கள் உடன் அரசின் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News

News March 25, 2025

பைக்கில் புகுந்த பாம்பு

image

உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (45). இவர், ஸ்பிளண்டர் பைக்கை, உளுந்துார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டுச் சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, பைக்கில் இரண்டடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பைக்கில் இருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

News March 24, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்.

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.03.2025) இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் அறிவித்துள்ளது ஆகவே பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரமும் அழைக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News March 24, 2025

கள்ளக்குறிச்சி: ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள தெற்கு காலனியை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற இளைஞர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும் நேற்று(மார்.24) இரவு சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!