News March 24, 2025
அரக்கோணத்தில் புகழ்பெற்ற குடைவரை கோவில்

அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடியில் உள்ள மகேந்திர விஷ்ணுகிருகம், மிகவும் பழமையான குடைவரை கோயில்களில் ஒன்றாகும். கி.பி. 600-630 ஆம் ஆண்டுகளில் மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரை, அவரது பெயரால் மகேந்திர விஷ்ணுகிருகம் என அழைக்கப்படுகிறது. தனித்துவமான சிற்பக்கலையுடன், வெட்டவெளியான இடத்தில் சிறுபாறையை குடையப்பட்டுள்ளது. அமைப்பு, பல்லவர் கால குடைவரை சிற்பக்கலையின் ஒரு அற்புத சின்னமாக திகழ்கிறது.
Similar News
News April 14, 2025
ராணிப்பேட்டை: பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெறும்.
News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- இரத்னகிரி முருகன் கோயில் போங்க

இராணிப்பேட்டை ரத்தினகிரி மலையில் உள்ள பாலமுருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News April 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள் எனவும் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் லிங்கை நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது