News April 1, 2025
அந்தியூர் வீரபத்திரசுவாமி திருக்கோயில்

ஈரோடு, அந்தியூரில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல், விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், ஆகிய பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று, வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் நீங்குமாம். இதை Share பண்ணுங்க.
Similar News
News April 3, 2025
ஈரோடு அருகே விபத்தில் இளைஞர் பலி!

ஈரோட்டை சேர்ந்தவர் கருப்புச்சாமி (28). இவர் நேற்றிரவு பைக்கில், பவானி வழியாக ஆப்பக்கூடல் சென்றுள்ளார். சேர்வராயன்பாளையம் வழியாக, நெடுஞ்சாலை ரவுண்டானாவை கடக்கும் போது, பைக், சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாயமடைந்த, கருப்பசாமி, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 3, 2025
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் காவல்துறை சார்ந்த குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா தலைமை வகித்தார். இதில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News April 3, 2025
ஈரோடு மக்களே! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <