News March 21, 2024
அதிமுக வேட்பாளர் எடப்பாடியிடம் வாழ்த்து

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார் என இன்று (மார்ச் 21) காலை அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 14, 2025
நெல்லை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
News April 14, 2025
வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி – பாஜக தலைவர்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து நேற்று நெல்லை வந்த அவரை பொதுமக்கள் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர். இதற்கு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அளித்த அமோக வரவேற்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. மாபெரும் வரவேற்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
News April 14, 2025
மேற்குத்தொடர்ச்சி மலையில் நீர் அருந்தும் காட்டெருமை கூட்டம்

தற்போது கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து காணி குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையிலுள்ள பனங்காட்டு ஓடை என்ற பகுதியில் குட்டிகளுடன் கூடிய சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் நீர் அருந்தி ஓய்வெடுத்து சென்றன.