News March 23, 2025
அதிசயங்கள் மிகுந்த ஆயிரங்காளியம்மன் ஆலயம்!

ஆயிரங்காளியம்மன் கோயில் காரைக்கால் அடுத்த திரு.பட்டினத்தில் உள்ளது. இந்த அம்மன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிப்பார். பேழையில் இருந்து கொலுசு சத்தம் கேட்ட பின்பே பேழை திறக்கப்படும். பேழையின் உள்ளே மாலைகள் வாடாமல் புதிதாகவே இருக்குமாம். இங்கு அம்மனுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைப்பார்கள். எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் வந்தது. அம்மன் அருள்பெற SHARE செய்யவும்
Similar News
News March 29, 2025
“விமான நிலையத்திற்கு பாரதிதாசன் பெயர்”

புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை பாரதிதாசன் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். அப்போது, “புதுச்சேரிக்கு தனிப்பெருமை ஏற்படுத்தித் தந்தவர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதுச்சேரி விமான நிலையத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும்” கோரிக்கை என்றார்.
News March 28, 2025
காரைக்காலில் இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் முதல்வர்

காரைக்கால் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
News March 28, 2025
மது போதையை ஏற்றி தங்க நகைகள் திருட்டு

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நபரிடம், பெண் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மது போதையை ஏற்றிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை உருளையான்பேட்டை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.