News March 18, 2025

அதிகாரிகளுக்கு புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை

image

புதுச்சேரி சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்திற்குப் பிறகு சபாநாயகர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சபைக்கு அதிகாரிகள் வரவேண்டும். குறிப்பாக துறை இயக்குநர்கள் பேரவை நடக்கும்போது இங்கு இருக்கவேண்டும். செயலர்கள், இயக்குநர்கள் பதில் தரவேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகளை முதல்வர் கருணையுடன் பல முறை மன்னித்து விடுகிறார். இனி தண்டனை தரப்படும். இதுவே இறுதி எச்சரிக்கையாகும்”.

Similar News

News March 19, 2025

புதுச்சேரியில் ரூ.1000 கோடியில் புதிய திட்டம்

image

நேற்று சட்டசபையில் கடல் அரிப்பால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு புதுச்சேரியில் 24 கி.மீ., துாரம் உள்ள கடலோர பகுதிகளை பாதுகாக்க இ-ஷோர் திட்டத்தின்கீழ் ரூ. 1,000 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சேர்த்து தான் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

News March 18, 2025

புதுவை: மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

image

புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு. மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் இன்று 18-3-25 இரவு 8 மணியளவில் கடந்த 2 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.. இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவு நிற்கின்றன.

News March 18, 2025

புதுவை சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

image

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் மக்களை காப்பாற்ற தேவையான மருந்துகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையத்தினை அணுகி சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!