News August 26, 2024
அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள், மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பதும், டாஸ்மாக் கடையால் குடும்பங்கள் சீரழிவதால் தான் இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.
Similar News
News August 7, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் இன்று (ஆக.7) சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, அடையார், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<
News August 6, 2025
போராட்ட களத்தில் சின்மயி

சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு மாற்றுவதை கண்டித்தும், நிரந்தர வேலை கோரியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையின் வெளியே கடந்த ஆக.1-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பின்னணி பாடகி சின்மயி இன்று நேரில் வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
News August 6, 2025
சென்னை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டுமையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10th தோல்வி, தேர்ச்சி, 12th, பட்டயப்படிப்பு முடித்து பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்கள் கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் என்றார். (SHARE )