News March 16, 2025
அண்ணணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கை கைது

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன். அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது சகோதரி செல்வி 50. கடந்த நவம்பரில் முருகன் உடல் நிலை பாதிப்படைந்ததால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதனிடையே முருகனின் ஏ.டி.எம்., கார்டை எடுத்து செல்வி முருகனின் அனுமதி இல்லாமல் ரூ. 5.04 லட்சத்தை எடுத்தார். தங்கை பண மோசடி செய்ததை முருகன் கண்டறிந்து போலீசில் புகாரளித்தார்.
Similar News
News March 17, 2025
போடி: பரமசிவன் கோவில் சிறப்புகள் பற்றி தெரியுமா?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ளது பரமசிவன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் தலவிருட்சம் தரும் வேம்பு மரம் உள்ளது. சிவராத்திரி, திருக்கிருத்திகை, உள்ளிட்ட நாட்களில் இங்குள்ள வேம்பு மரத்தை வழிபட்ட பிறகு , இங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு மூலவரையும் ,உற்சவரையும் வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் செய்து உதவுங்கள் .
News March 17, 2025
தேனி காவலர் குடியிருப்பில் மீட்கப்பட்ட நல்ல பாம்பு

தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பாம்பின் நடமாட்டம் இருப்பதை கண்ட குடியிருப்பு வாசிகள் தேனியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பாம்பு கண்ணன் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தார்.
News March 17, 2025
தேனியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் தேனி மின் உதவி கொட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மார்ச்.18) காலை 11 மணி முதல் பகல் ஒரு மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தேனி செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.