News May 13, 2024
அணைக்கட்டு அருகே அபூர்வ நிகழ்வு

அணைக்கட்டு வட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமா மகேஸ்வரி கைலாய நாதர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று (மே 13) சூரிய ஒளி நேரடியாக சிவபெருமான் மீது விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
Similar News
News April 21, 2025
காளை முட்டி இளைஞர் உயிரிழப்பு

குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அ.மோட்டூர் கிராமத்தில், 20ஆம் ஆண்டு எருது விடும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருது நிகழ்ச்சியைக் காண அகரம் கிராமத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். காளை முட்டியதில் பலத்த காயமடைந்த பரந்தாமன் (32) என்பவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
News April 21, 2025
சிறுமியை கடத்தி சென்று திருமணம்

வேலூரைச் சேர்ந்த பிரசாத் (27) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 குழந்தை உள்ள நிலையில், 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி அந்த சிறுமி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பிரசாத் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, குகையில் பதுங்கியிருந்த பிரசாத், சூர்யா, விஜய் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 20, 2025
வேலூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

▶மாவட்ட ஆட்சியர் – 0416-2252345, ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 0416-2253502, வேலூர் சார் ஆட்சியர் – 9445000417, ▶திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை – 7373704205, ▶மாநகராட்சி ஆணையர் 7397389320, ▶ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008159, ▶வேலூா் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) 7402606606, ▶உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 7824058059, ▶மக்கள் தொடர்பு அலுவலர் – 9498042453. ஷேர் செய்யுங்கள்