News April 6, 2025
அச்சமின்றி தர்ப்பூசணி பழத்தை சாப்பிடலாம்

காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் லட்சுமி, “தர்ப்பூசணியில் நிறத்திற்காக, ஊசி போடுவதாக வதந்தி எழுந்தது. காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்தபோது, இதுபோன்ற செயல்கள் எதுவும் நடக்கவில்லை. தர்ப்பூசணி பழங்களில், ‘லைக்கோபின்’ எனும் சிவப்பு நிறம் இயற்கையாகவே இருப்பதால், இனிப்பு மற்றும் நிறம் குறித்து, எவ்வித அச்சமும் இன்றி தர்ப்பூசணி பழத்தை பொதுமக்கள் வாங்கி சாப்பிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2025
காஞ்சிபுரத்தில் ரூ.1000 கோடி முதலீடு: 5000 பேருக்கு வேலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோபேஸ் தொழிற்பூங்காவில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னனு உற்பத்தி சேவை திட்டத்தை நிறுவுவதற்கு ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திட்டத்தால் புதிதாக 5000 பேருக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் என கூறப்படுகிறது. SHARE TO FRIENDS
News April 9, 2025
பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

பரந்தூர் விமானநிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News April 9, 2025
சாதனைகள் படைத்த அரசு பள்ளி மாணவி, மாணவனுக்கு பாராட்டு

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பி.கே.எம்.போனிக்ஸ் ஷிட்டு ரியோ கராத்தே அசோசியேசன் தலைவர் முரளியிடம், கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று பல்வேறு தேசிய அளவிலான கராத்தேப்போட்டி மற்றும் மாநில அளவிலான டேக்வாண்டா மற்றும் சிலம்ப போட்டிகளில் தங்கம் வென்ற ஆற்காடு நாராயண சுவாமிப் பள்ளி மாணவி சரஸ்வதி & முசரவாக்கம் அரசுப்பள்ளி மாணவன் அறிவுநிதியை மாவட்ட எஸ்.பி. சண்முகம் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.