News November 5, 2024
ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்து: பொருள்கள் நாசம்
பெரும்பாக்கம், எழில் நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பில் உள்ள 5ஆவது தளத்தில் வசிப்பவர் குணசேகரன் (31). இவரது மனைவி சங்கரி (30). தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரூ.20,000 மதிப்புள்ள பொருள்கள் நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 20, 2024
டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5.80 லட்சம் விருது தொகை. 2025ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று விருது வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர், விண்ணப்பத்தை www.tn.gov.in/ta/forms/1 இணையதளத்தில் (அ) காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம் என அறிவிப்பு.
News November 19, 2024
ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி தற்கொலை
பரந்தூர் சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து புதிய விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி திவ்யா கணபதி, நேற்று மாலை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய சுங்குவாசத்திரம் போலீசார், தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 19, 2024
தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய அனுமதி கோரி விண்ணப்பம்
தமிழ்நாட்டில் ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.