News August 5, 2024
பிளாட்ஃபார்ம் கட்டணம் மூலம் ₹83 கோடி ஈட்டிய Zomato

பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் மற்றும் நள்ளிரவு ஆர்டர்கள் அதிகரிப்பால் Zomato நிறுவனம் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, பி.எஃப் கட்டணம் மூலம் ₹83 கோடியை ஈட்டியுள்ளது. கடந்தாண்டு ஆக.,மாதம் ₹2 என்றளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கட்டணம் தற்போது ₹6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் Zomatoவின் சரிசெய்யப்பட்ட வருவாய் 27% அதிகரித்து ₹7,792 கோடியாக பதிவாகியுள்ளது.
Similar News
News March 15, 2026
BIG BREAKING: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்திற்கு எப்போது சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மக்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. வழக்கம்போல், ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதேபோல், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்காளர்களே, தயாராக இருங்க!
News March 15, 2026
FLASH: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள்!

5 மாநிலங்களில் 2,18,807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. TN-ல் நகரங்களில் 30,967, கிராமப்புறங்களில் 44,065 என மொத்தமாக 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன. சராசரியாக 756 பேருக்கு ஒரு வாக்குசாவடி அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டம் வருசநாடு மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு 3 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் என CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். SHARE IT.
News March 15, 2026
5 மாநில தேர்தல்.. முக்கிய அறிவிப்பு

TN, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக CEC ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த வாக்காளர் எண்ணிக்கையானது தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளின் மக்கள் தொகைக்கு இணையானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 20 நாடுகளை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் இந்த 5 மாநில தேர்தல் திருவிழாவை காண வருகை தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


