News October 23, 2025
G Pay-வுக்கு போட்டியாக களமிறங்கும் Zoho pay

கூகுள் பே, Phonepe-வுக்கு போட்டியாக Zoho Pay என்ற செயலியை Zoho நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்மூலம், பணத்தை பல மடங்கு பாதுகாப்போடு அனுப்பவும், பெறவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே Zoho-வின் அரட்டை செயலியை வைத்திருந்தால், அதன் மூலமாகவும் பணம் அனுப்பும் வசதியை கொண்டுவர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் கடன்கள், காப்பீடுகள் கூட வழங்கப்பட இருக்கிறதாம்.
Similar News
News October 23, 2025
அனைத்து பள்ளிகளிலும்.. பறந்தது புதிய உத்தரவு

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 5 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என HM – களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 23, 2025
காடுகள் வளர்ப்பில் இந்தியா டாப்-3

காடுகள், பூமியின் நுரையீரல். அவை அழியும் போது, மனித வாழ்வின் சுவாசமும் நின்று போகிறது. இந்த காடுகளை அதிகரிப்பதில், UN அறிக்கையின்படி உலகளவில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. உலக வன பரப்பு தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி, தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது. 2025-ல் இந்தியாவின் வனப்பரப்பு 72.7 மில்லியன் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் சுமார் 2% ஆகும்.
News October 23, 2025
பிரபல தமிழ் நடிகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விபத்து

கோவையில் நடந்த ‘டியூட்’ பட நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று ரசிகர்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி இளைஞர்கள் படையெடுத்ததால், தடுப்புகள் சரிந்து விழுந்தது. இதில், சிலர் காயமடைந்துள்ளனர்.