News April 14, 2024

புத்தாண்டில் கோடீஸ்வரனாகப் போகும் ராசிகள்

image

மூன்று கிரகங்கள் சேர்ந்து உண்டாகும் திரிகிரஹி யோகத்தால் வெற்றி கைகூடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் மீன ராசியில் சஞ்சரித்துள்ளதால் மேஷம், சிம்மம், துலாம், விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப் போகிறது. தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி, இரட்டிப்பு ஊதிய உயர்வு, பங்கு முதலீடுகளில் லாபம் என பல்வேறு பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

Similar News

News January 21, 2026

கோலியை பாலோ பண்ணுங்க: கவாஸ்கர்

image

இளம்வீரர்கள் கோலியின் ஆட்ட பாணியை பின்பற்றி விளையாட வேண்டும் என Ex கிரிக்கெட்டர் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி ODI தொடரை இழந்தது. 3-வது போட்டியில் ஒற்றை ஆளாக ரன்கள் குவித்த கோலி குறித்து பேசிய கவாஸ்கர், இன்னிங்ஸை நிதானமாக கட்டமைத்து பின்னர் ரன் குவிப்பில் கவனம் செலுத்தும் அவரின் ஆட்டத்தை இளம் வீரர்கள் பாடமாக எடுத்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

News January 21, 2026

NASA-ல் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

image

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(60) NASA-ல் இருந்து ஓய்வு பெற்றார். 3 முறை விண்வெளிக்கு பயணித்துள்ள அவர், மொத்தம் 608 நாள்கள் அங்கு கழித்தார். மேலும், 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணங்களையும் (9 முறை) அவர் மேற்கொண்டுள்ளார். 1998-ல் NASA-ல் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். டிசம்பர் 27-ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளதாக NASA அறிவித்துள்ளது.

News January 21, 2026

திமுகவில் இணைகிறார்.. விஜய்க்கு அதிர்ச்சி

image

ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் தவெகவுக்கு செல்லவிருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், களநிலவரம் மாறி மூவரும் தற்போது திமுகவில் இணையவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் OPS-ம் திமுகவில் விரைவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!