News March 19, 2024
மரண அடி வாங்கப் போகும் ராசியினர்

70 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகையன்று (மார்ச் 25) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ரிஷபம், துலாம், விருச்சிகம், மீன ராசியினர் வாழ்வில் கொந்தளிப்பை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக மன அழுத்தம், உடல் நலம் சார்ந்த தொல்லை, வேலை செய்யும் இடத்தில் பிரச்னை, கொடுக்கல் வாங்கலில் தகராறு, தீராத கடன் பிரச்னை போன்ற பல சிரமங்களை மேற்கண்ட ராசியினர் எதிர்கொள்ள உள்ளனர்.
Similar News
News September 7, 2025
SCIENCE vs MYTH: கிரகணத்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அறிவியலின் படி *கிரகணத்தின் போது கர்ப்பிணி வெளியே செல்வதால், பிறக்கும் குழந்தைக்கு தழும்பு ஏற்படும் என்பது உண்மையல்ல *கிரகணத்தின்போது சமைப்பதாலோ, சாப்பிடுவதாலோ உணவு நஞ்சாகாது *சந்திர கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்கலாம், எந்த பாதிப்பும் ஏற்படாது. *கிரகணத்தால் தண்ணீரோ, தாவரங்களோ அசுத்தமாகாது *கிரகணத்தின் போது குளிக்காமல் இருப்பது பாவம் என்பது மத நம்பிக்கையே தவிர, அறிவியல் அடிப்படையிலானது அல்ல.
News September 7, 2025
SCIENCE: உங்களால் வயிறு இல்லாமல் வாழமுடியுமா?

உணவை சேமிப்பது, அதை செரிமானத்துக்கு அனுப்புவது என முக்கிய வேலைகளை வயிறு செய்கிறது. ஆனால் வயிறு இல்லாமலும் நம்மால் உயிர்வாழ முடியும் என டாக்டர்கள் சொல்கின்றனர். கேன்சர், எடை குறைப்பு சர்ஜரி உள்ளிட்டவைகளுக்காக வயிறு அகற்றப்படுகிறது. வயிறு இல்லாத நபர், உண்ணும் உணவு நேரடியாக சிறுகுடலுக்கு செல்லுமாம். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது, ஆனால் செரிமானத்தில் சிரமங்கள் ஏற்படலாம் என சொல்கின்றனர்.
News September 7, 2025
2 நாளில் ₹50 கோடியை அள்ளிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘மதராஸி’ கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலில் படம் பட்டையை கிளப்பி வருகிறது. 2 நாள்களில் உலகளவில் ₹50 கோடியை படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வது நாளான இன்றும் பல இடங்களில் படம் ஹவுஸ்புல்லாக ஓடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்க படம் பாத்தாச்சா?