News March 5, 2025
டிரம்ப் வைத்த செக்.. பணிந்த ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா ஒப்புக்கொண்டால் முதற்கட்டமாக கைதிகளை பரிமாறுவது, வான் வழி, கடல் வழி போரை நிறுத்த தாங்களும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு அடம்பிடித்து வந்த ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கான ராணுவ நிதியை டிரம்ப் நேற்று நிறுத்தியதும், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2025
இளையராஜாவிற்கு புது பெயர் வைத்த திருமா

இளையராஜாவிடம் இருப்பது தான் என்ற அகந்தை அல்ல, அது தன்னை உணர்ந்த மெய்ஞானத்தின் வெளிப்பாடு என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரை இசைஞானி என்பதை விட மெய்ஞானி என அழைப்பதே பொருந்தும் எனவும், அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பது வியப்பை தருவதாகவும் திருமா கூறியுள்ளார். இசை என்னிலிருந்து வேறு அல்ல என்று கூறும்போது, அவரது கண்களில் ஞானஒளியை உணரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 5, 2025
பெண்களுக்கு சௌமியா அன்புமணி அட்வைஸ்

பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என சௌமியா அன்புமணி அறிவுறுத்தியுள்ளார். முன்பின் தெரியாத, பழக்கம் இல்லாத நபர்களை சமூக வலைதளங்களில் நண்பர்களாக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும், நமக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த பெற்றோர்களை மதித்து பழக வேண்டும் எனவும் கூறியுள்ளார். முன்னேறுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் சிறந்த உயர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 5, 2025
அல்லு அர்ஜுன் -அட்லி படத்தில் 5 ஹீரோயின்கள்?

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க உள்ள புதிய படத்தில், 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்க்ரிப்டின் படி 5 நடிகைகள் தேவைப்படுவதாகவும், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மெயின் ஹீரோயினாக ஜான்வி கபூரும், மற்றொரு இந்திய நடிகையும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.