News December 15, 2024
3 வயதிலேயே இசையை தொடங்கிய ஜாகிர்

ஜாகிர் உசேனின் தந்தையின் பிரபல இசைக் கலைஞராக இருந்தவர். 3 வயதிலேயே தந்தையிடம் மிருதங்கம் கற்றுக்கொள்ள தொடங்கிய ஜாகிர், 12 வயதிலேயே பெரிய இந்துஸ்தானி மேதைகளுக்கு தபேலா வாசிக்க தொடங்கினார். பீட்டில்ஸ் உள்பட பிரபல மேற்கத்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்த ஆண்டில் 66வது கிராமி விருதுகளில், ஒரே இரவில் 3 விருதுகள் வென்று வரலாறு படைத்தார்.
Similar News
News August 5, 2025
ஓரணியில் தமிழ்நாடு.. அழைப்பு விடுத்த திமுக

தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைய வேண்டும். நம் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆக.11,12-ல் ஸ்டாலின், கோவை, திருப்பூரில் ஆய்வு செய்யவிருக்கும் நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
தங்கம் விலை ₹600 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ₹75 ஆயிரத்தை நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து, ₹74,960ஆகவும், கிராமுக்கு ₹75 உயர்ந்து ₹9,370ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1-ம் தேதி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹73,200ஆக விற்பனையான நிலையில், 4 நாளில் ₹1,760 அதிகரித்துள்ளது.
News August 5, 2025
‘கூலி’ டைம் டிராவல் படமா? லோகி சொல்வதை கேளுங்க!

‘கூலி’ படத்தை சயின்ஸ் ஃபிக்சன், டைம் டிராவல் படமென ரசிகர்கள் சொல்வது தனக்கே வியப்பாக இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படம் எதைப்பற்றியது என ரசிகர்கள் பார்த்து ஆச்சரியப்படுவதை பார்க்கவே தான் ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாகர்ஜுனாவிடம் 7 முறை கதை சொன்ன பின்னரே, அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.