News December 15, 2024
உலகின் தலைசிறந்த தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன்

உலக அளவில் அறியப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தபேலா இசைக் கலைஞர், ஜாகிர் ஹுசேன் ஆவார். கம்போசர், பெர்குஷனிஸ்ட், நடிகர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட கலைஞரான இவர், கிராமி விருது வென்றவர். இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. இந்துஸ்தானி, ஃபியூஷன் என ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவரது மனைவி அண்டோனியா கதக் நடனக் கலைஞர்.
Similar News
News August 30, 2025
‘ராட்சசன்’ போல் இருக்குமா ‘ஆர்யன்’?

த்ரில்லர் படங்களில் பலரின் பேவரைட் ‘ராட்சசன்’ என்று சொல்லலாம். மீண்டும் அதேபோன்ற படத்தை விஷ்ணு விஷாலிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், அதேபோல் ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையான ஆர்யனில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். ‘ஆர்யன்’ படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா விஷ்ணு விஷால்?
News August 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் ▶குறள் எண்: 443
▶குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
▶ பொருள்: பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
News August 30, 2025
US வரி விதிப்பை எதிர்கொள்வது எப்படி? பியூஸ் கோயல் விளக்கம்

அமெரிக்காவின் வரி விதிப்பால், ஏற்றுமதியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதை பரிசீலித்து வருவதாகவும், இதன் மாற்றங்கள் விரைவாக நம்மால் உணர முடியும் எனவும் கூறியுள்ளார். ஏற்றுமதியை பரவலாக்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.