News August 20, 2024

LSG அணியின் ஆலோசகராகும் ஜாகீர் கான்?

image

அடுத்த ஆண்டு IPL தொடரில் லக்னோ சூப்பர்ஜெயண்ட் அணியின் ஆலோசகராக இந்திய அணி முன்னாள் வீரர் ஜாஹீர் கான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக LSG அணி நிர்வாகம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவரால் பவுலர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்க முடியும் என நிர்வாகம் கருதுவதாகவும் Cricbuzz தளம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Similar News

News March 25, 2026

கணவன் – மனைவி.. பெட்ரூமில் இப்படி செய்யுங்க..

image

இரவு பெட் ரூமுக்குள் சென்றதும், களைப்பு காரணமாக உடனே உறங்கிவிடக் கூடாது. கணவன் – மனைவி இருவரும் மனம் திறந்து பேச வேண்டும். அன்றைய நாளின் மகிழ்ச்சியை பகிர்ந்து சந்தோஷமான தூக்கத்தை தேட வேண்டும். கைகளை ஒன்றாக பிணைந்து பேசினால் ஆத்மார்த்தமான, ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லலாம். இவற்றை கடைப்பிடித்தால் உளவியல் ரீதியாக தாம்பத்தியமும் சிறக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

News March 25, 2026

FLASH: உதயசூரியனில் போட்டியிடும் கருணாஸ்

image

கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக தலைமை வேகம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிமுன் அன்சாரியின் மஜக, SDPI & கருணாஸின் முக்குலத்தோர் புலி படை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் SDPI, முக்குலத்தோர் புலி படை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஓரிரு நாள்களில் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வெளியாகும் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

News March 25, 2026

பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கும் விஜய்?

image

சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், பெரம்பூரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டு CEO அர்ச்சனா பட்நாயக்கிடம் செங்கோட்டையன், CTR நிர்மல் குமார் கடிதம் கொடுத்துள்ளனர். விரைவிலேயே விஜய் பிரசாரத்தை தொடங்குவார் என்றும், ரோட் ஷோவுக்கு அனுமதி கேட்டிருப்பதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!