News April 16, 2025
ஆண் குழந்தைக்கு அப்பாவானார் ஜாகீர் கான்..!

இந்திய அணியின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் – ஹிந்தி நடிகை சாகரிகா காட்கே தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் இருவரும் பதிவிட்டுள்ளனர். அதில், ‘அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன் எங்கள் ஆண் குழந்தை ஃபதேசின் கானை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். நட்சத்திர தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 16, 2025
LSG-யில் இணைந்த இளம் புயல்..

தனது வேகம் மற்றும் துல்லியமான பந்து வீச்சால் கடந்த சீசனில் அசத்தியவர் மயங்க் யாதவ். இதனால் அவரை லக்னோ அணி ₹11 கோடிக்கு தக்க வைத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் லக்னோ அணியில் இதுவரை இணையாமல் இருந்தார். காயம் குணமடைந்ததால் தற்போது லக்னோ அணியுடன் மயங்க் இணைந்துள்ளது கூடுதல் பலம் சேர்க்கும். 19-ம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News April 16, 2025
கூட்டணி ஆட்சி குறித்து பதிலளிக்க மறுப்பு

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு பதிலளிக்க பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார். கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் அமித் ஷாதான் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் கூட்டணி ஆட்சி குறித்தும் அவரே முடிவெடுப்பார் எனவும் நயினார் நாகேந்திரன் பேசினார். மேலும், கூட்டணி ஆட்சி அல்ல என்று EPS பேசியது குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக கருத்து கூற இயலாது என்றார்.
News April 16, 2025
இடைக்கால உத்தரவுகள் நிறுத்தி வைப்பு

வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் <<16118424>>பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.<<>> வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு யாரும் இடம்பெறக் கூடாது என்ற முக்கிய உத்தரவை பிறப்பித்த சில நிமிடங்களில் தலைமை நீதிபதி அமர்வு அதனை நிறுத்தி வைத்தது. நாளை முழுமையான விசாரணைக்குப் பின்னர் உத்தரவுகள் அனைத்தும் பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.