News February 14, 2025
தலாய்லாமாவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு!

திபெத்திய மத குரு தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்ததை அடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. திபெத் விவகாரத்தில் தலாய்லாமா மீது கோபத்தில் உள்ள சீனா, அவரை கொல்ல பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இமாச்சலில் உள்ள அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2025
உறுதியான பற்களுக்கு டிப்ஸ்!

உங்கள் பற்களை உறுதியாக வைக்கும் உணவுகள்.
*பால், பாலாடைக்கட்டி, தயிர் போன்ற பால் பொருட்கள்.
*கேரட், ஆப்பிள், வெள்ளரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்கள்.
*வோக்கோசு, கீரை, வெங்காயம், வெந்தயம், செலரி போன்ற கீரைகள்.
*உலர் திராட்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, குருதிநெல்லி போன்ற பெர்ரிகள்.
*ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை போன்ற பழங்கள்
News February 19, 2025
தமிழ்.. தமிழ்.. 60 ஆண்டாக பேச மட்டுமே செய்கின்றனர்: R.N.ரவி

TN அரசியல்வாதிகள், தமிழ் தமிழ் எனப் பேச மட்டுமே செய்வதாக R.N.ரவி விமர்சித்துள்ளார். 60 ஆண்டுகளாகவே தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எவ்வித சேவையையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், பாரதியார், கம்பர், வால்மீகி போன்றோரை பற்றி பேசுகிறோம்; போற்றுகிறோமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழின் பெருமையை பின்பற்றி நாம் பயணிக்கிறோமா என்பதும் கேள்விக்குறியே எனவும் கூறியுள்ளார்.
News February 19, 2025
CM பதவியை ராஜினாமா செய்யத் தயார்: மம்தா

வங்கதேச நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால், மேற்குவங்க மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். தன்னை எதிர்கொள்ள பாஜகவினருக்கு தைரியம் இல்லை என விமர்சித்த அவர், அதனால் தான் முஸ்லிம் லீக் அமைப்பில் நான் உறுப்பினராக இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாக சாடினார்.