News April 1, 2024

சினிமாவில் கால் பாதிக்கும் யுவராஜ் சிங்

image

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சினிமாத்துறையில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தானே இயக்கி, தயாரித்து, நடிக்க உள்ளதாக X தளத்தில் தெரிவித்துள்ளார். ‘எனக்கு உங்களுடைய ஆசீர்வாதம் தேவை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தப் படத்தை நீங்கள் திரையில் காண்பீர்கள் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார். இருப்பினும் இன்று ஏப்ரல் 1 என்பதால் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Similar News

News August 12, 2025

உங்களின் தலையெழுத்தை மாற்றும் ஒற்றை சொல்..

image

தொடர் தோல்விகளால் தவித்து போயிருப்பவர் நீங்கள் என்றால், இந்த ஒரு வார்த்தை உங்களின் தலையெழுத்தையே மாற்றும். எந்த ஒரு சூழலிலும் ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தை மட்டும் மனதில் ஆழமாக நிறுத்துங்கள். அதே போல, சுத்தமான கரும்பலகையில்தான் எதையும் எழுதமுடியும். ஆகவே மனதிலுள்ள குப்பைகளை நீக்குங்கள், அதாவது எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். SHARE IT.

News August 12, 2025

உயிருக்கு போராடும் நடிகருக்கு உதவிய தனுஷ்

image

துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ், ‘நண்பா மீண்டும் வந்துவிடுவாய்’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.

News August 12, 2025

விஜய்யை நேரடியாக சாடிய திருமாவளவன்

image

தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலைகளின் போது, பெரிய கட்சிகள் மௌனம் காப்பதாக திருமாவளவன் சாடியுள்ளார். புதிய கட்சிகளும் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என தெரிவித்த அவர் ஆணவக் கொலையை விஜய்யால் கூட கண்டிக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி சென்ற EPS, கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!