News April 26, 2024
உலகக் கோப்பை டி20 தூதராக யுவராஜ் சிங் நியமனம்

உலகக் கோப்பை டி20 தூதராக யுவராஜ் சிங்கை ஐசிசி அறிவித்துள்ளது. முதல் டி20 உலகக் கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த யுவராஜ் சிங், 2007இல் டி20 மற்றும் 2011இல் 50 ஓவர் உலக் கோப்பையை இந்தியா வாங்குவதற்கு காரணமாக இருந்தார். உசேன் போல்ட், கிறிஸ் கெயில் ஆகியோருடன் யுவராஜ் சிங்கும் இந்தப் போட்டியின் தூதராக
அறிவிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை டி20 போட்டி ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது
Similar News
News April 2, 2026
வங்கி கணக்கில் ₹5,000.. வந்தாச்சு HAPPY NEWS

அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், லட்சக்கணக்கான பயனாளிகளின் வங்கி கணக்கில் ₹1,000 முதல் ₹5,000 வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையான வருமான வரி கட்டாத சேமிப்பு கணக்குதாரராக இருந்தால் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப 60 வயதுக்குபின் ஓய்வூதியம் கிடைக்கும். SHARE IT
News April 2, 2026
குலுங்கி குலுங்கி சிரிக்கும் நோய் தெரியுமா?

சந்தோஷத்தில் மட்டுமல்ல, நோயால்கூட சிரிப்பு வரும். ஆம், வெடித்துச் சிரிப்பது (அ) கெக்கலிக்கும் ‘Laughing Epilepsy’ என்ற ஒருவகை அரிய நோய் உள்ளதாம். மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் ஏற்படும் பாதிப்பால் வலிப்புடன் சிரிப்பு வருவதே இதன் அறிகுறி. இந்நோய் பாதித்த ஒருவருக்கு சிக்கலான சர்ஜரி செய்து குணப்படுத்தியுள்ளனர் ஜோத்பூர் எய்ம்ஸ் டாக்டர்கள். நாட்டிலேயே 2 ஹாஸ்பிடல்களில் தான் இச்சிகிச்சை வசதி உள்ளதாம்.
News April 2, 2026
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு வெளியானது!

DCM உதயநிதி ஸ்டாலின் தனக்கு ₹12.92 கோடிக்கு அசையும் சொத்துகளும், ₹7.72 கோடிக்கு அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதில் ₹1 கோடி மதிப்புள்ள டிஃபெண்டர் காரும் அடங்கும். அவரது மனைவி கிருத்திகாவிடம் ₹1.87 கோடி மதிப்பிலான 1,600 கிராம் தங்கம் உள்பட ₹13.25 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அசையா சொத்துகள் எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


