News June 4, 2024
INDIA கூட்டணியின் பின்னணியில் யூடியூபர்கள்

INDIA கூட்டணி இந்த அளவிலான முடிவுகளை பெற சமூக வலைதள ஈர்ப்பாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், குறிப்பாக யூடியூபர் துருவ் ரதே, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதேபோல், ராண்டிங் கோலா, நேஹா சிங், அர்பித் ஷர்மா போன்றவர்களும் பொதுப் பிரச்சனைகள், நிர்வாகத் தோல்விகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் முன்னணியில் உள்ளனர்.
Similar News
News March 7, 2026
கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்த HDFC

HDFC வங்கி லோன் வட்டி விகிதங்களை சற்று குறைத்துள்ளதால், லோன் வாங்கியவர்களுக்கு EMI குறைய வாய்ப்பு உள்ளது. MCLR அடிப்படையில் ஹோம் லோன், கார் லோன், பர்சனல் லோன் வாங்கியவர்களின் வட்டி செலவு குறையும். இதனால் EMI அல்லது லோன் காலம் குறையும். முந்தைய MCLR வரம்பு 8.25%–8.60%; தற்போது 8.15%–8.55% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
News March 7, 2026
இந்திய ரசிகர்களின் இதயத்தை நொறுக்குவாரா சான்ட்னர்?

கடந்த 2023 ODI WC பைனலில் இந்தியாவை தோற்கடித்து அகமதாபாத் ஸ்டேடியத்தையே ஒட்டுமொத்தமாக அமைதியாக்கினார் பேட் கம்மின்ஸ். போட்டிக்கு முன்பே இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாங்கள் ஃபேவரைட் இல்லை என்றாலும், சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வோம்; அது சிலருடைய இதயத்தை நொறுக்கலாம் என சான்ட்னர் கூறியுள்ளார். கம்மின்ஸ் போல இவரும் சொன்னதை செய்வாரா?
News March 7, 2026
மோசமான ஹேர் கட்.. ₹25 லட்சம் இழப்பீடு

2018-ல் டெல்லி ITC Maurya ஹோட்டலில் உள்ள சலூனில் மோசமாக முடி வெட்டியதற்காக மாடல் ஒருவர் ₹25 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார். அவர், ஸ்டைலிஸ்ட் செய்த ஹேர் கட்டால் மாடலிங் வாய்ப்புகளை இழந்ததாக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதற்கு நுகர்வோர் நீதிமன்றம் அவருக்கு ₹2 கோடி இழப்பீடு அறிவித்தது. ஆனால் ITC இதை எதிர்த்து SC-ஐ அணுகியது. இதையடுத்து இழப்பீடு தொகை ₹25 லட்சமாக திருத்தம் செய்யப்பட்டது.


