News October 17, 2025
VIRAL: பாலிவுட் கான்களுடன் யூடியூப் கிங் மிஸ்டர் பீஸ்ட்!

எப்போதும் தன் கிரேஸி வீடியோக்களால் இணையத்தை தெறிக்கவிடும் மிஸ்டர் பீஸ்ட், இன்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டோவால் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். பாலிவுட் கிங்ஸ் ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோருடன் தான் இருக்கும் போட்டோவை போட்டு, ‘ஹே இந்தியா! நாம ஒண்ணா சேர்ந்து ஏதாவது செய்யலாமா?’ எனக் கேட்டுள்ளார். இதனால் நிச்சயம் ஒரு பெரிய சம்பவம் காத்திருக்கு என ரசிகர்கள் கமென்ட் செய்துவருகின்றனர்.
Similar News
News October 17, 2025
செவ்வாய்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?.. வந்தது அப்டேட்

தீபாவளி பண்டிகைக்கு மேலும் ஒருநாள்(அக்.21) விடுமுறை விட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதனிடையே, போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க செவ்வாய் அன்றும் சேர்த்து 4 நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.
News October 17, 2025
₹21 லட்சத்துக்கு Free ஆக உணவு சாப்பிட்ட நபர்!

ஜப்பானில் ஒருவர் உணவு ஆர்டர் செயலியை ஏமாற்றி கடந்த 2 ஆண்டுகளாக ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்டுள்ளார். செயலியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என புகார் கொடுப்பதை நம்பி, செயலியும் பணத்தை திருப்பி கொடுத்து, உணவையும் அளித்து வந்துள்ளது. 124 போலி சிம் கார்டு மூலம் 1,095 முறை அவர் உணவை சாப்பிட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் செய்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News October 17, 2025
புதிய கொடி அறிமுகம்.. அண்ணாமலை எடுத்த முடிவு

நெல்லையில் அண்ணாமலைக்கு மன்றம் தொடங்கியதோடு, புதிதாக கொடி அறிமுகம் செய்யப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி X-ல் பதிவிட்டுள்ள அண்ணாமலை, என் மீது வைத்திருக்கும் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், அனைவரும் முதலில் தங்களது குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். உங்க கருத்து?