News August 24, 2024
ரொனால்டோவுக்கு வாழ்த்து தெரிவித்த யூடியூப்

24 மணி நேரத்தில் 19.7 மில்லியன் Followers பெற்றதற்காக ரொனால்டோவுக்கு, You tube வாழ்த்து கூறியுள்ளது. ‘யுஆர் கிறிஸ்டியானோ’ என்ற பெயரில் ரொனால்டோ, சில தினங்களுக்கு முன் You tube சேனலை தொடங்கினார். தற்போது வரை அவரது பக்கத்தை 38 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதுவரை 19 வீடியோக்களை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இவரின் You tube பக்கம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 18, 2025
விரக்தியின் உச்சத்தில் அன்புமணி: அமைச்சர்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணி தோற்றதால் இந்த மாவட்டத்தை ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என அன்புமணி தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய அமைச்சர் MRK பன்னீர் செல்வம், தருமபுரியை புறக்கணித்திருந்தால் 2024 லோக் சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு எப்படி 100 சதவீதம் வெற்றிக் கிடைத்திருக்கும் என கேட்டார். மேலும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் எனவும் விமர்சித்தார்.
News August 18, 2025
சமூக அர்ப்பணிப்புக்கு கிடைத்த மணிமகுடம்: EPS வாழ்த்து

NDA கூட்டணியின் சார்பில் தமிழர் ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ள PM மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு நன்றி என EPS தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த சமூக சேவை மற்றும் மக்கள் மீதான அர்ப்பணிப்புக்கு கிடைத்த மணிமகுடம் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News August 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.