News September 4, 2025
30 நாள்களுக்கு ஒருமுறை செக் செய்யும் யூடியூப்

யூடியூப்பின் Subscription வகைகளில் ஒன்றான Premium Family கணக்கில் இருக்கும் அனைவரும் ஒரே முகவரியில் வசிக்கவில்லை என்றால், இதன் சேவை 14 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்ற புதிய விதி வந்துள்ளது. இதன்படி, 30 நாள்களுக்கு ஒருமுறை இக்கணக்கில் உள்ளவர்களின் Location-ஐ யூடியூப் தானாக சரிபார்க்குமாம். Password பகிர்வதை கட்டுப்படுத்த இந்த முறை பின்பற்றப்பட உள்ளது. கவனமா இருங்க பயனர்களே!
Similar News
News September 4, 2025
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்!

மந்திரம்:
‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய,
ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’
*காலை பிரம்ம முகூர்த்த வேளையில் விநாயகரின் மந்திரத்தை சொல்வதன் மூலம், பல நன்மைகள் கிட்டும். வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்க, இந்த மந்திரத்தை சொல்லுங்கள். SHARE IT.
News September 4, 2025
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு?

EPS பரப்புரையின்போது ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்குதலுக்கு உள்ளானது பேசுபொருளானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை HC-ல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த HC, ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்தது. அத்துடன், போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து தமிழக DGP பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News September 4, 2025
ராமதாஸ் விதித்த கெடு: இன்று பதிலளிக்கும் அன்புமணி

ராமதாஸ் தலைமையிலான பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனையடுத்து, இதற்கு பதிலளிக்க ஆக.31 வரை அவகாசம் அளித்து, அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் பதிலளிக்காத நிலையில், செப்.10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இன்று (செப்.4) பதிலளிப்பேன் என்று அன்புமணி கூறியுள்ளார். இது பாமக வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.