News October 24, 2024
வேப்பூரில் சிறுவனை தாக்கிய இளம்பெண் கைது

வேப்பூர் அடுத்த மாளிகைமேட்டை சேர்ந்தவர் செல்வம் மகன் அஸ்வின் (14). செல்வம் குடும்பத்துக்கும், பக்கத்தில் வசிக்கும் வெங்கடேசன் மனைவி பிரியா(23) குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது. இந்த விரோதம் காரணமாக பிரியா, அஸ்வினை உருட்டுகட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அஸ்வின், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிந்து பிரியாவை கைது செய்தனர்.
Similar News
News August 24, 2025
கடலூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
News August 24, 2025
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை ஆக.25-ம் தேதி, தனது 68-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றார்.
News August 24, 2025
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம்

கடலூர் மாவட்டம், குடிகாடு கிராமத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் இன்று (ஆகஸ்ட் 23) மதில்சுவர் சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த கம்பளி மேடு பகுதியைச் சேர்ந்த இளமதி மற்றும் இந்திரா ஆகியோர் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.