News March 24, 2025
‘கலக்குறீங்க ப்ரோ’… பிரதீப்பை பாராட்டிய விஜய்…!

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் வேகமாக வளர்ந்து வருகிறார். அவர் நடித்த லவ் டுடே, டிராகன் என 2 படங்களும் ஹிட் அடித்த நிலையில், கலக்குறீங்க ப்ரோ என நடிகர் விஜய் தன்னை பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் இருக்கும் படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் அனைவருக்கும் தனது உணர்வு புரிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 29, 2025
கவுன்ட்டரில் எடுத்த டிக்கெட்டை ஆல்லைனில் ரத்து செய்யலாம்

ரயில்வே ஸ்டேஷன் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை இனி ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். IRCTC இணையதளம் அல்லது 139 என்ற எண்ணில் அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ரத்து செய்யலாம். பின்னர், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுன்ட்டரில் கொடுத்து, தங்களின் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
ஆசிய மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்

ஜோர்டனில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா 62 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். வடகொரிய வீராங்கனை ஜி கிம்மை 8-7 என்ற புள்ளிக்கணக்கில் மனிஷா வீழ்த்தினார். அதேபோல், 53 கிலோ எடை பிரிவில் அந்திம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ம்ன்ப்ம்ன்
News March 29, 2025
தடையின்றி கேஸ் சிலிண்டர் கிடைக்கும்

எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள், 3ஆவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் உருவாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்; வீடு மற்றும் வர்த்தக சிலிண்டர்கள் விநியோகம் வழக்கம் போல் நடக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.