News August 7, 2024
உங்கள் வெற்றி டெல்லி வரை கேட்கிறது: ராகுல்

பாரிஸில் வினேஷ் போகத் வெற்றியின் எதிரொலி, டெல்லி வரை கேட்டதாக ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளார். ஒரே நாளில் உலகின் டாப் மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் வீழ்த்தியதாகவும், நமது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டங்களை விமர்சித்தவர்கள், ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இந்த வீர மகளுக்கு முன் வீழ்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். களத்திலிருந்து பதிலளிப்பதுதான் சாம்பியன்களின் அடையாளம் எனவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 26, 2026
இன்று மறந்தும் இவற்றை செஞ்சிடாதீங்க..

ராமப்பிரானின் பிறந்த நாளான இன்று மறந்தும் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது *வெங்காயம், பூண்டு, இறைச்சியை தவிர்க்கவும் *இன்றைய தினம் தலைமுடியை வெட்டுவதையோ அல்லது சவரம் செய்வதையோ தவிர்க்கவும் *ராம நவமி அன்று மற்றவர்களை விமர்சிக்கவோ, தவறாக பேசவோ கூடாது. மனதில் ராம நாமத்தை நிலைநிறுத்துங்கள் *உங்கள் துணையை எந்த ஒரு காரியத்திற்கும் ஏமாற்றாதீர்கள். SHARE IT.
News March 26, 2026
FLASH: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்ட உடைமைகளையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் கைது பிரச்னை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் அட்டூழியம் நடப்பதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News March 26, 2026
நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை: சீமான்

திருடர்களிடம் ஆட்சியை கொடுத்ததால், திருடிய காசில் ₹1,000 ₹2,000 பங்கு கொடுக்கிறான் என சீமான் விமர்சித்துள்ளார். கல்வி, மின்சாரம், மருத்துவத்தை திமுக இலவசமாக்காதது ஏன் என கேட்டுள்ளார். இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி, வடமாநிலத்தவருக்கு வேலை வழங்குவதாகவும், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேற வேண்டியதுதான் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


