News March 2, 2025

உங்கள் ஆசையில் மண் விழும்: ஸ்டாலின்

image

எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது; உங்கள் ஆசையில் தான் மண் விழும் என்று பாஜக மற்றும் அதிமுகவுக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நாங்கள் தமிழர்கள்; சுயமரியாதையுள்ள திராவிடர்கள் எனக் கூறிய அவர், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகவும், இந்தி திணிக்கப்படமாட்டாது என்றும் பிரதமர் மோடி எழுத்துப்பூர்வமாக உறுதி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

Similar News

News March 13, 2026

பெட்ரோல், கேஸ் சிலிண்டர்.. அடுத்த அதிர்ச்சி

image

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகவே உள்ளதாகவும், சில கட்டுப்பாடுகள் என்பது தற்காலிகமானதே என அரசு கூறியிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை இருமடங்கு உயர்ந்ததால், நேற்று இரவு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சில பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், ஹோட்டல்களில் உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 13, 2026

சமையல் எண்ணெயின் விலை உயர்ந்தது

image

போரின் விளைவால் சமையல் எண்ணெயின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது விலை கிலோவுக்கு ₹1 – ₹4 வரை உயர்ந்துள்ளன. சன்ஃபிளவர் எண்ணெய் ₹4 உயர்ந்துள்ள நிலையில், பாமாயில் ₹2.50, கடலை எண்ணெய் ₹2, சோயாபீன் எண்ணெய் ₹1 என உயர்ந்துள்ளன. தனது வெஜிடபிள் ஆயில் தேவையில் சுமார் 90%-ஐ இந்தியா வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.

News March 13, 2026

தேர்தலில் போட்டியிடமாட்டேன்: வைகோ

image

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இப்போது மட்டுமல்ல, ஒருகாலமும் பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். பார்லிமென்ட்டில் மனநிறைவுடன் பணியாற்றி 1,300 முறை பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக, 3 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

error: Content is protected !!