News January 7, 2025
ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்

குஜராத் மாநிலம் கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் அப்பெண்ணை மீட்க போராடி வருகின்றனர். தற்போது அவருக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜஸ்தானில் 700அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 9 நாட்கள் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டும், உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 13, 2025
ஜிமெயிலில் தெரிந்துகொள்ள வேண்டிய டிரிக்ஸ்

வெறும் மெயில் அனுப்புவதற்காக நாம் ஜிமெயில் பயன்படுத்துவதை தாண்டி பல முக்கிய அம்சங்கள் அதில் உள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 2 பில்லியன் பயனாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துவதாக தரவுகள் சொல்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் இமெயிலில் பல எளிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் நாம் அறியாத சில செட்டிங்ஸ் உள்ளன. அதை தெரிந்துகொள்ள மேலே SWIPE செய்து பாருங்கள்..
News September 13, 2025
தொண்டர்களின் அன்பு மட்டுமே பெரியது: விஜய்

அரியலூர் பரப்புரையில் பேசிய தவெக தலைவர் விஜய், மக்களுக்காக உழைப்பதை தவிர தனக்கு வேறு எந்த வேலையும் இல்லை எனத் தெரிவித்தார். தொண்டர்களின் அன்பை விட எதுவும் பெரிதல்ல என்றும், தான் பார்க்காத பணமில்லை எனவும் குறிப்பிட்டார். அரசியலுக்கு வந்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் தனக்கில்லை எனவும் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.
News September 13, 2025
வாகனங்களுக்கு ஒரே நம்பர் பிளேட்; விஜய்யின் Sentiment?

திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள விஜய்யின் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே நம்பர் பிளேட் உள்ளது. TN 14-0277 என்ற நம்பரை அவர் தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர், இது அவரது தங்கையின் பிறந்ததேதி எனவும் இன்னொரு தரப்பினர் ’1977’ MGR முதல்வரான வருடம் எனவும் Decode செய்து வருகின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் செண்டிமெண்ட் என்ன? கமெண்ட் பண்ணுங்க.