News May 6, 2024
அஜாக்கிரதையால் பலியாகும் இளைஞர்கள்

நண்பர்களோடு சுற்றுலாச் செல்லும் இளைஞர்கள், அஜாக்கிரதையால் பலியாவது சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. விடுமுறை தினத்தைக் கழிக்க, கொண்டாட்ட மனநிலையோடு நீர்நிலைகளில் குளிக்கும் அவர்கள், விளையாட்டாக ஆழமான பகுதிகளுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், இளைஞர்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News August 27, 2025
BREAKING: ஓய்வு பெற்றார் அஸ்வின்

IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் அஸ்வின் சற்றுமுன் அறிவித்துள்ளார். 2009-ல் CSK அணிக்காக களமிறங்கிய அவர், RR, DC உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி, 187 (IPL) விக்கெட்டுகள், 833 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றிருந்தார். கடந்த IPL சீசனில் CSK-வில் இடம்பெற்ற அவர், சரியாக விலையாடவில்லை என சர்ச்சை எழுந்தது.
News August 27, 2025
SPORTS ROUNDUP: துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

◆ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் கம்ரா தங்கம் வென்றார்.
◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் மற்றும் பிவி சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
◆அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்.
News August 27, 2025
கட்சி தொடங்கிய பின், முதல்முறையாக விஜய்

‘விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்’ என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக கட்சியை துவங்கிய அவர், அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது சர்ச்சையானது. கடந்த ஆண்டு வாழ்த்து கூறாத விஜய், இந்த ஆண்டு கூறியுள்ளதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?