News April 11, 2025
EX லவ்வரை பழிவாங்கிய இளைஞர்.. 300 பார்சலா?

2k கிட்ஸ் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லாமல் போச்சு. மேற்கு வங்கத்தை சேர்ந்த சுமன் சிக்தர் என்பவர் தனது முன்னாள் காதலியை பழிவாங்க நூதன முறையை தேர்ந்தெடுத்துள்ளார். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இருந்து முன்னாள் காதலியின் முகவரிக்கு கேஷ் ஆன் டெலிவரியில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். 300க்கு மேற்பட்ட ஆடர்கள் வந்ததால் விரக்தி அடைந்து அப்பெண் புகார் அளிக்க. சுமன் கைது செய்யப்பட்டார்.
Similar News
News December 7, 2025
தேனி: மகளிர் உரிமைத் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

தேனி மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது: DCM

அமித்ஷாவுக்கு எதிராக எந்த கருத்தும் கூறமுடியாத நிலைக்கு EPS தள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். அதிமுக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்ற அவர், அது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை; சொல்லப்போனால் அதிமுகவே இல்லை எனவும் சாடியுள்ளார்.
News December 7, 2025
உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.


