News February 9, 2025
மகிழ்ச்சியை கொண்டாடிய இளைஞர் மரணம்

சென்னையில் கிரிக்கெட் போட்டி வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடிய இளைஞர் உயிரிழந்தார். அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது, தங்களது அணி வெற்றி பெற்றதால், அதனை மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற கார்த்திக் என்பவர் துள்ளிக்குதித்து கொண்டாடியுள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 17, 2026
ராசி பலன்கள் (17.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 17, 2026
ஆதவ் அர்ஜுனா பேச்சு அரசியல் நாகரிகமற்றது: EPS

ரஜினியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என EPS கூறியுள்ளார். X தளத்தில் இதுகுறித்த தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அரசியலுக்கு வராத காரணத்தை ரஜினிகாந்த் தெரிவித்துவிட்ட போதிலும், அதை அரசியல் நோக்கத்தோடு அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது அரசியல் நாகரிகமற்ற செயல் என EPS கண்டித்துள்ளார்.
News March 17, 2026
தமிழக தேர்தல்.. புதிய அறிவிப்பு வெளியானது

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் உதவி எண்களை ECI அறிவித்துள்ளது. 1950 வாக்காளர் உதவி எண் மற்றும் ‘Book a Call with BLO’ வசதியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான குறைகளுக்கு வாக்காளர்கள் தீர்வை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1800-11-1950 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. SHARE THIS


