News September 28, 2025

கரூர் துயரத்தில் மரணித்த இளம்ஜோடி

image

கரூர் துயரத்தில் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடி பூக்காமல் செடியிலேயே மரணத்திருக்கிறது. கோகுலஸ்ரீ – ஆகாஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடத்த நிலையில், வருங்கால மனைவியுடன் விஜய்யை பார்த்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு ஆகாஷ் கரூர் சென்று இருக்கிறார். பொண்ணு மாப்பிள்ளையாக ஜோடியாக சென்றவர்கள் திரும்பி வரவில்லை.

Similar News

News September 28, 2025

BREAKING: நிதியுதவி அறிவித்தார் விஜய்

image

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ₹20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹2 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

News September 28, 2025

சற்றுநேரத்தில் நீதிமன்றம் செல்கிறார் விஜய்

image

கரூர் துயரம் தொடர்பாக, நீதிமன்றத்தை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு சென்று, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தவெக முறையிடவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால், விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News September 28, 2025

2025-ம் ஆண்டும்.. உலுக்கும் கூட்ட நெரிசல் மரணங்களும்!

image

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணங்கள் துரதிர்ஷ்டவசமானது என வருந்தும் நேரத்தில், 2025-ல் நிகழ்ந்த கூட்டநெரிசல் மரணங்கள் நினைவுக்கு வராமல் இல்லை. கோயில், திரையரங்கம், அரசியல் கூட்டம் என மக்கள் கூட்டத்தில் நசுங்கி உயிரிழப்பது தொடர்கதையாகவே இருக்கிறது. இந்த ஆண்டில் நிகழ்ந்த கூட்டநெரிசல் சம்பவங்களை மேலே கொடுத்துள்ளோம். Photo-க்களை வலது புறமாக Swipe செய்து பார்க்கவும்.
<<-se>>#karurstampede<<>>

error: Content is protected !!