News April 18, 2025
இளம் நடிகரும், பாடகருமான மிசுகி இடகாகி மரணம்

பிரபல நடிகரும், பாப் பாடகருமான மிசுகி இடகாகி(24) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஜப்பான், தென் கொரியாவில் ஜே-பாப் பாய் குழுவில் ஏராளமான பாடல்கள் பாடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்த மிசுகி, பிரபலமான Teman Girls, Heart Beats, The Blue Skies at Your Feet உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #RIP
Similar News
News April 19, 2025
ஒலிம்பிக் கிரிக்கெட்டில் ENG இல்லை.. அதற்கு பதிலாக..

2028 ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து அணிகள் இணைந்து ஒருங்கிணைந்த பிரிட்டன் அணியை உருவாக்க உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் CEO ட்ரூடி தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2028 ஜூலை 14 முதல் ஜூலை 30 வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 6 அணிகள் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
News April 19, 2025
பாஜக குலத்தொழிலை ஊக்குவிக்கிறது: CM விமர்சனம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினைத் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கிறது என விமர்சித்தார். எனவே தான், சாதி பாகுபாடு இல்லாத வகையில் கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கலைஞர் கைவினைத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
News April 19, 2025
ஏசி புறநகர் ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம்?

கோடையை சமாளிக்க சென்னையில் ஏ.சி புறநகர் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ₹35. பீச்-செங்கல்பட்டு வரை ₹105. தாம்பரம்-பீச் மார்க்கத்தில் 5.45AM-க்கு ( ALL STOPS) புறப்படும். பீச்-செங்கல்பட்டு 7AM-க்கும், 3.45 PM-க்கும் இயக்கப்படும். செங்கல்பட்டு-பீச் 9AM-க்கு, 5.45 PM-க்கு, பீச்-தாம்பரம் 7.35 PM-க்கும்( ALL STOPS) இயக்கப்படும். ஞாயிறு சேவை இல்லை.