News March 29, 2025

வெயிலில் கருப்பு நிற ஆடை அணிய கூடாது: ஏன் தெரியுமா?

image

கோடைக்காலத்தில் கருப்பு நிற ஆடைகளை தவிர்க்குமாறு பெரியவர்கள் கூறுவார்கள். அதற்கு பின்னால் அறிவியல் காரணம் இருக்கிறது. கருப்பு நிறம் ஒளியையும், வெப்பத்தையும் உறிஞ்சி அதிகளவில் வெளியிடும். இதனால், உடலின் வெப்பநிலை அதிகரித்து நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து மெல்லிய வெளிர் நிற ஆடைகளை அணிவது சிறந்தது. SHARE IT.

Similar News

News April 1, 2025

வணிக சிலிண்டர் விலை குறைந்தது

image

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையிலான சிலிண்டர் விலை ₹43.50 குறைந்துள்ளது. இதனால், ₹1,965க்கு விற்று வந்த வர்த்தக சிலிண்டர் விலை ₹1,921.50ஆக குறைந்துள்ளது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. GAS விலை மாற்றம் குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News April 1, 2025

இன்று ‘ஏப்ரல் Fool தினம்’ ஏன் தெரியுமா?

image

உலகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டு வரை ஏப்.1 புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போதைய போப் கிரகோரி 8, ஜன.1ஐ புத்தாண்டாக அறிவித்தார். இதை அறியாத ஃபிரான்ஸ் மக்கள், ஏப்.1ஐ புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். இதை அறிந்த மற்ற பகுதி மக்கள், ஃபிரான்ஸ் மக்களை கிண்டலடித்து Fun செய்தனர். அப்போது முதல் ஏப்.1 உலக முட்டாள்கள் தினமானது.

News April 1, 2025

மும்மொழிக் கொள்கைக்கு 35 லட்சம் பேர் ஆதரவு

image

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு 35 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த மாதம் தொடங்கியது. ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்காக பாஜகவினர் வீடு வீடாக சென்று மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!