News September 7, 2025
சந்திர கிரகணத்தில் இதெல்லாம் செய்யக் கூடாது!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சந்திர கிரகணத்தின்போது வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக் கூடாது. ஆலய நுழைவு தரிசனம் கூடாது. கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது. மேலும், கிரகணம் முடிந்த பிறகு சில முக்கியமான விஷயங்கள் செய்ய வேண்டுமாம். அதன்படி, வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். மேலும், கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். SHARE IT.
Similar News
News September 8, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம் விலை இன்று(செப்.8) காலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹280 குறைந்த நிலையில், மாலை நேர வர்த்தகப்படி சவரனுக்கு ₹720 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் 1 கிராம் ₹10,060-க்கும், ஒரு சவரன் ₹80,480-க்கும் விற்பனையாகிறது.
News September 8, 2025
DGP நியமன நடைமுறை என்ன?

தற்போதைய DGP பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன், DGP அந்தஸ்துக்கு தகுதியான காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு UPSC-க்கு அனுப்ப வேண்டும். அதிகாரிகளின் தகுதி, அவர்களின் சேவை உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு, தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசுக்கு UPSC பரிந்துரைக்கும். பின்னர் மாநில முதல்வரின் தலைமையிலான குழு பரிந்துரையை ஆய்வு செய்து இறுதியாக DGP-ஐ நியமனம் செய்யும்.
News September 8, 2025
தவறாக பேசினால் ஆசிட் ஊற்றுவேன்: TMC தலைவர்

வாங்காள மக்களை வெளிநாட்டினர் என சித்தரித்தால் பாஜக MLA வாயில் ஆசிட் ஊற்றுவேன் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹீம் பஷி பேசியுள்ளார். மேற்கு வங்காலத்திருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் என பாஜக MLA ஷங்கர் கோஷ் தெரிவித்த கருத்துக்கு, பதிலடியாக இந்த எச்சரிக்கையை அவர் கொடுத்துள்ளார். பஷியின் கருத்துக்கு BJP-வும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.