News April 28, 2025
உங்களுக்கு கூட இருக்கலாம் IDIOT syndrome! உஷாரா இருங்க!

திடீரென தலைவலி, ஜுரம் வந்தா நீங்களே கூகிளில் பார்த்து மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரா? அல்லது அப்படியானவர் உங்களுக்கு தெரியுமா! அந்த பழக்கம் இருப்பவர்களுக்குதான், IDIOT syndrome இருக்கிறது. இது Internet Derived Information Obstructing Treatment (IDIOT) syndrome எனப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் இது அதிகரித்தும் வருகிறது. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், டாக்டரை அணுகுவதே சிறந்தது.
Similar News
News September 18, 2025
BREAKING: செங்கோட்டையன் நீக்கம்? இபிஎஸ் பதில்

செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்து பேசிய EPS, ‘கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அதிமுகவில் வழக்கம்’ என்று விளக்கமளித்தார். அப்போது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய எழுப்பினர். அதற்கு, உட்கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசமுடியாது என சூசகமாக பதிலளித்தார்.
News September 18, 2025
கர்சீப்பை வைத்து முகத்தை மறைக்கவில்லை: இபிஎஸ்

டெல்லியில் அமித்ஷா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைக்கத்தான் செய்தேன்; மறைக்கவில்லை என்று இபிஎஸ் விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இனிமேல் பாத்ரூம் போனால் கூட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டுதான் போக வேண்டிய அரசியல் சூழல் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
News September 18, 2025
வாக்கு திருட்டுக்கு ECI உடந்தை: ராகுல் காந்தி

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.