News August 5, 2024
இளம் வயது எம்பிக்கள் அதிகம் இருந்த காலகட்டம் தெரியுமா?

தற்போதைய மக்களவையில் 35 வயதுக்கும் குறைவாக, 25 எம்பிக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1980இல் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக 52 ஆக இருந்துள்ளது. 1984இல் 43, 1989இல் 31, 1991இல் 40, 1996இல் 33, 1998இல் 34, 1999இல் 29, 2004இல் 31, 2009இல் 22, 2014இல் 33, 2019இல் 21 என்ற எண்ணிக்கையில் இளம் எம்பிக்கள் இருந்துள்ளனர். தற்போது மக்களவையில் 30வயதுக்கும் குறைவாக 3 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 31, 2026
அண்ணாமலை புறக்கணிப்பா? நயினார் விளக்கம்

கோவையில் PM மோடி வரவேற்பு நிகழ்ச்சிக்கான பட்டியலில் அண்ணாமலை <<19514484>>பெயரை சேர்க்காமல்<<>> பாஜக புறக்கணித்துள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை ஊரில் இல்லாததால்தான் வரவேற்பாளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என நயினார் விளக்கமளித்துள்ளார். மேலும், PM வரவேற்பு தொடர்பாக அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
தொடர்கதையாகும் கூட்ட நெரிசல் மரணங்கள்!

<<19522596>>பிஹாரில் <<>>இன்று கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்த சம்பவம், இந்தியாவில் நெரிசல் மரண துயரத்துக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்துகிறது. கடந்த ஆண்டில் RCB, கரூர் கூட்ட நெரிசல் என பல உயிர்கள் இங்கு மரணித்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இப்பிரச்னைக்கு சரியான தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை. ஏன் இந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கிறது என நினைக்கிறீங்க?
News March 31, 2026
FLASH: அதிமுகவில் இணைந்த திமுக முக்கிய தலைவர்

OPS வருகைக்கு பிறகு தேனி மாவட்ட திமுகவில் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு, பூத் பணிகளில் பழைய நிர்வாகிகளுக்கு முக்கியத்தும் குறைந்துள்ளதாம். இதனால் அதிருப்தியடைந்த, ஒருங்கிணைந்த EX தேனி மாவட்ட செயலாளரும், திமுக தீர்மானக் குழு இணைச் செயலருமான ஜெயக்குமார் உள்ளிட்ட 50 நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இந்த விவகாரம் திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.


