News April 10, 2025
லவ் ஜிகாத் தெரியும்.. அதென்ன சர்பத் ஜிகாத்?

சர்பத் ஜிகாத் நாட்டில் பரவி வருவதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். சில கம்பெனிகளின் சர்பத்தை நீங்கள் வாங்கினால், அந்த பணம் மசூதிகளை கட்ட பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தனது பதஞ்சலி சர்பத்தை வாங்கினால், அந்த பணம் குருகுலம் கட்ட உதவும் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில மருத்துவ முறை குறித்து தவறான விளம்பரம் வெளியிட்டதாக அவர் கோர்ட்டில் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 18, 2025
திருமணத்தை மீறிய உறவு: ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

ஆணும், பெண்ணும் தங்களது திருமண உறவை மீறி பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது என கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பிபாஸ் ரஞ்சன் அமர்வு, தொடக்கத்திலிருந்தே சம்மதத்துடன் நடந்த உடலுறவு, வாக்குறுதியின் பேரில் ஏமாற்றமாக கருத முடியாது என்பதால் ஆண் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது.
News April 18, 2025
மனித குலத்தின் அடுத்த மிகப்பெரிய நகர்வு இதுதான்!

பூமி அழிந்தால், மனித குலமும் அத்துடன் அழிந்துவிடும் என்ற கூற்றை திருத்தி எழுதும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியை பெற்று விட்டனர் USA மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். சூரிய மண்டலத்துக்கு வெளியே இருக்கும் K2-18b எனும் கிரகத்தில் குறைந்தபட்சம் நுண்ணிய உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இக்கிரகம் சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில், லியோ விண்மீன் கூட்டத்தில் இருக்கிறது.
News April 18, 2025
‘என்னங்க சார் உங்க சட்டம்’ MI-யால் வெடித்த சர்ச்சை!

DC vs RR அணிகளுக்கு எதிரான மேட்ச்சில் DC-யின் ஸ்டார்க் back-foot no-ball வீசினார். ஆனால், அதே மாதிரியான ஒரு பந்தை KKR-க்கு எதிரான மேட்ச்சில் MI-யின் விக்னேஷ் புதூர் வீசியதற்கு நோ-பால் வழங்கப்படவில்லை. இது சர்ச்சையாகி இருக்கிறது. IPL தரப்பில் இந்த சர்ச்சைக்கு இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளிவரவில்லை. நெட்டிசன்கள், ‘MI வேலையைக் காட்ட தொடங்கிவிட்டது’ என கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?