News February 17, 2025
எப்போதும் காங்கிரஸ்காரனாக இருக்க முடியாது: சசி தரூர்

பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அண்மையில் பாராட்டியது பேசு பொருளானது. அதற்கான காரணத்தை விளக்கிய சசி தரூர், டிரம்ப் பதவியேற்ற பின், அவரை சந்தித்த 4 ஆவது உலகத் தலைவர் நமது பிரதமர். அப்படியென்றால் உலக அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் என்னவென்பதை புரிந்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார். தவிர, எல்லா நேரங்களிலும் காங்கிரஸ்காரனாக இருக்க முடியாது என்றார்.
Similar News
News December 5, 2025
BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.
News December 5, 2025
அதானி குழுமத்திற்கு ₹48,000 கோடி கொடுத்த LIC

அதானி குழுமத்தின் கடன்களை தீர்க்க LIC பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பார்லி.,யில் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி குழுமத்தில் LIC ₹48,284.62 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த முதலீட்டை செய்ய சொல்லி அரசு உத்தரவிடவில்லை எனவும், LIC தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
சற்றுமுன்: விலை மளமளவென சரிந்தது

கார் பிரியர்களுக்கு சிறப்பான செய்தியை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் Arena ஷோரூம்களில் பல மாடல் கார்களுக்கு, டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ₹58,100 வரை கஸ்டமர்கள் சேமிக்கலாம். எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.


