News March 16, 2025
ஐடி கார்டு இல்லாமல் ஆட்டோ ஓட்ட முடியாது

ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அடையாள அட்டை வழங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, PHOTO உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
Similar News
News March 16, 2025
துணிச்சலான மனிதர்.. டிரம்புக்கு மோடி பாராட்டு

துணிச்சலான மனிதர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பை PM மோடி புகழ்ந்துள்ளார். முதல்முறை அமெரிக்க அதிபராக இருந்ததைவிட, தற்போது 2ஆவது பதவிக்காலத்தில் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு டிரம்ப் வந்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். தனக்கும், டிரம்புக்கும் பரஸ்பரம் நல்ல புரிதல் உண்டு என்றும், தங்கள் 2 பேருக்கும் அனைத்து விவகாரங்களையும் விட தேச நலன்களே பெரிது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 16, 2025
ராகு கேது பெயர்ச்சி. பணம் கொட்டப் போகுது

2025ஆம் ஆண்டுக்கான ராகு, கேது பெயர்ச்சி மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சர்ப்ப கிரகங்கள் எப்போதும் நன்மை தரக்கூடியவை இல்லை என்றாலும், 2026 வரை அவை அமர்ந்திருக்கக்கூடிய இடத்தைப் பொறுத்து சில ராசிகளுக்கு யோகம் வாய்க்கப்போகிறது. ராகு, கேது பெயர்ச்சியால் மிதுனம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய 4 ராசிகளுக்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப்போகிறது.
News March 16, 2025
TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. அவகாசம் நீட்டிப்பு

TMB வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அந்த வங்கியின் கிளைகளில் 124 சீனியர் கஸ்டமர் சர்வீஸ் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கு இந்த <