News September 20, 2024
‘பேச்சி’ படத்தை ஓடிடியில் பார்க்கலாம்

‘பேச்சி’ திரைப்படம் நாளை முதல் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. ராமசந்திரன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிப்பில் வெளியான இப்படம், திகில் நிறைந்த த்ரில்லர் ஜானரில் உருவாகி இருந்தது. இது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருந்தது. இந்நிலையில், திரையங்குகளில் இப்படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
Similar News
News August 21, 2025
மேடையில் MGR பாடலை பாடிய விஜய்..

தவெக மாநாட்டில் உரையாற்றிய போது பல இடங்களில் எம்.ஜி.ஆர் பற்றி பேசிய விஜய், ’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்ற ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட பாடலையும் பாடினார். பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவும் வைத்திருக்கும் மறைமுக உறவை ஒழிக்க மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கவேண்டும் எனக் கூறிய அவர், நீட் ரத்து, மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பல கோரிக்கைகளை வைத்தார்.
News August 21, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹1,500.. நாளை முதல் ஆரம்பம்!

நடப்பாண்டு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.10-ல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இதில், தேர்வாகும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ₹1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை(ஆக.22) முதல் செப். 4-ம் தேதி வரை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ₹50 கட்டணத்துடன் HM-களிடம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT.
News August 21, 2025
PF கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், EPF-லிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்படும் (ஏப்ரல் 1, 2025 முதல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ₹8.8 லட்சமாக இருந்தது. இத்தொகை இறந்தவரின் சட்டரீதியான குடும்பத்தினர் / வாரிசுகளிடம் வழங்கப்படும். மேலும், இத்தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயர்த்தப்படும் எனவும் EPFO அறிவித்துள்ளது.