News May 16, 2024
டி20 கிரிக்கெட் போட்டிகளை திரையரங்குகளில் பார்க்கலாம்

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளை நேரலையாக திரையிட PVR Inox நிறுவனம் ஆலோசித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பெரிய அளவிலான பாக்ஸ் ஆஃபிஸ் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக சரிந்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், டி20 உலகக்கோப்பை போட்டிகளை திரையிட்டால் கிரிக்கெட் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கலாம் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Similar News
News September 19, 2025
மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கும் அஸ்வின்!

சிக்சர் மழை பொழியும் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவுள்ளார். IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் இந்திய அணியை அஸ்வின் வழிநடத்தவுள்ளார். அஸ்வின் விளையாடுவதால் இந்த தொடர் மேலும் பிரபலமடையும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
News September 19, 2025
மெதுவாக வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம்

புதுச்சேரியில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு உயரதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அம்மாநில CM ரங்கசாமி கூறி வந்த நிலையில், அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ₹250 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டிலும் இதை கொண்டு வரலாமா?
News September 19, 2025
EPFO சேவைகள் இனி ஈஸி

பிஎப் (EPFO) இணையதளத்தில் சேவைகளை பெற லாக்-இன் செய்யும்போது, பாஸ்புக் விவரங்களை பார்க்க தனியே லாக்-இன் செய்ய வேண்டியிருந்தது. இனி அந்த சிரமம் இருக்காது. இனி உறுப்பினர் பக்கத்துக்கு லாக்-இன் செய்வதிலேயே பாஸ்புக் விவரங்களையும் பார்க்க முடியும். தனியே லாக்-இன் செய்யும் தேவை இருக்காது. மேலும், PF டிரான்ஸ்பர் சான்றிதழையும் பிடிஎப் வடிவில் இந்த தளத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.