News May 1, 2024
‘மங்காத்தா’ படத்தை இலவசமாக காணலாம்

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் மே 5ஆம் தேதி வரை ‘மங்காத்தா’ திரைப்படத்தை சன் எக்ஸ் டி OTT தளத்தில் இலவசமாக காணாமல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அஜித் நடித்த தீனா, பில்லா ஆகியத் திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளன. 53ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித்துக்கு, சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 21, 2025
கஸ்டமர்களை ஏமாற்றிய Rapido.. ₹10 லட்சம் அபராதம்

ஆட்டோ கேரண்டி, கேஷ்பேக் சலுகைகள் என விளம்பரங்களை வெளியிட்டு கஸ்டமர்களை தவறாக வழிநடத்தியதாக Rapido நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ₹10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ‘5 நிமிடத்தில் ஆட்டோ கிடைக்கவில்லையென்றால் ₹50 கேஷ்பேக்’ என விளம்பரத்தை வெளியிட்டு, பணத்திற்கு பதிலாக Rapido காயின்களை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹50 பணமாக கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளது.
News August 21, 2025
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?