News October 29, 2025
அதுக்கு ஆபாச படங்களை எடுக்கலாம்: பேரரசு

‘டியூட்’ படத்தை இயக்குநர் பேரரசு மறைமுகமாக விமர்சித்துள்ளார். எந்த படங்களை எடுத்தாலும், அதன் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும் எனவும், கலாச்சார சீரழிவு படங்களை எடுப்பதை விட ஆபாச படங்களை எடுப்பது எவ்வளவோ மேல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கலாச்சார சீரழிவு படங்களை எடுத்து மக்களை கெடுக்க வேண்டாம் எனவும், பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்கிறது என்றும் பொங்கியுள்ளார்.
Similar News
News October 29, 2025
பால் நிலவாக மின்னும் பிரியங்கா மோகன்..!

கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா மோகன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவரது அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது பிரகாசமான முகத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர், இன்ஸ்டாவில், தனது அபுதாபி விடுமுறை சுற்றுலா படங்களை பகிர்ந்துள்ளார். போட்டோஸ் பாருங்க, பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News October 29, 2025
மோடிஜி பயப்படாதீர்கள்: ராகுல்

ஒவ்வொரு நாட்டிற்கு டிரம்ப் செல்லும் போதும், PM மோடியை அவமதிக்கிறார்; சமீபத்தில் தென் கொரியாவில் அவமதித்துள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வர்த்தகத்தை காரணம் காட்டி ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாகவும், 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், மோடிஜி பயப்படாதீர்கள்; தைரியத்தை வரவழைத்து டிரம்ப்புக்கு பதிலடி கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
Sports Roundup: ஸ்குவாஷில் கலக்கும் அனாஹத் சிங்

*இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ODI-ல் நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. *கனடா ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில், இந்தியாவின் அனாஹத் சிங் உலகின் 7-ம் நிலை வீராங்கனை டினே கிலிஸை நேர் செட்களில் வீழ்த்தினார். *ஜெர்மனியில் நடக்கும் ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி. *காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து நிதிஷ் ரெட்டி விலகல்.


