News August 19, 2025

படம் எடுக்கலாம்… ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் நாளை(ஆக.20) தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், மரங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!

Similar News

News March 7, 2026

கணவருக்கான தகுதிகள்.. மனம் திறந்த விஜய் பட நடிகை!

image

GOAT, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை மீனாட்சி செளத்ரி, தனது வருங்கால கணவருக்கான தகுதிகள் குறித்து பேசியது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தன்னை திருமணம் செய்யும் நபருக்கு குறைந்தது 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். சமையல், துணி துவைத்தல், இஸ்திரி செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு நான் ரெடி என பலரும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News March 7, 2026

உடனே 94450 30725 எண்ணுக்கு HI அனுப்புங்க

image

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் 94450 30725-ஐ தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த எண்ணுக்கு ‘HI’ என குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். உடனே ஆம்புலன்ஸ் சேவை கிடைத்துவிடும். மேலும், மொபைல் ஜிபிஎஸ் மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் துல்லியமாக சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்க.

News March 7, 2026

5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும். SHARE.

error: Content is protected !!